Back to Preview the Alpha Talks

ஆல்பாவுடன் (சலசலப்புடன்)

Watch Teaser

மிகவும் விரும்பப்படும் ஆல்பா திரைப்படத் தொடரின் உள்ளடக்கம், ஒவ்வொரு எபிசோடிலும் விவாத இடைவெளிகளுடன் புதிய ஊடாடும் வடிவத்தைக் கொண்டுள்ளது. இந்த புதிய வடிவம் உங்கள் ஆல்பா விருந்தினர்களுடன் நிச்சயதார்த்தத்தை ஊக்குவிக்கும், அத்துடன் உங்கள் புரவலர்களும் உதவியாளர்களும் கலந்துரையாடல் நேரத்தை எளிதாக்க உதவும் என்று நம்புகிறோம்.

15 talks – 11 வாரங்கள் / டோபி பிலின்ட் & ஜெம்மா ஹண்ட்

இன்றைய பார்வையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டு, இந்த ஆல்பா படத் தொடர் கலந்துரையாடல் இடைவேளைகளுடன் உணர்வுபூர்வமாகவும், ஈடுபாடை தூண்டும் வகையில் பிரமாண்டமாய் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிக்கி கம்பெல் மற்றும் புதிய இரண்டு தொகுப்பாளர்கள், டோபி மற்றும் ஜெம்மா ஹண்ட், எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படைகளை தொகுத்து வழங்குகிறார்கள்.

இந்த உரைகள், உலகெங்குமிருந்து பல்வேறு உற்சாகமளிக்கும் உண்மை கதைகள் மற்றும் இன்டெர்வியூக்களுடன் / நேர்காணல்களுடன், காட்சி வடிவங்கள் மற்றும் மோஷன் கிராபிக்ஸ் நிறைந்து காணப்படுகிறது.

  • 11 வாரங்கள்
  • 16 அமர்வுகள்

வழங்குபவர்கள்

டோபி பிளின்ட் மற்றும் ஜெம்மா ஹன்ட் ஆகிய இரண்டு புதிய வழங்குநர்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

டோபி லண்டனில் உள்ள ஹோலி டிரினிட்டி ப்ரோம்ப்டன் தேவாலயத்தில் க்யூரேட்டாகவும், ஜெம்மா பாஃப்டா விருது பெற்ற டிவி தொகுப்பாளராகவும் உள்ளார். ஆல்ஃபாவின் முன்னோடியான நிக்கி கும்பெல் உடன், அவர்கள் பார்வையாளர்களை கிறிஸ்துவ மதத்தைக் கண்டறியும் காவியப் பயணத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.

டோபி பிலின்ட்

டோபி முன்பு ஹோலி டிரினிட்டி ப்ரோம்ப்டன் திருச்சபையில் ஆல்பாவை முன்னின்று நடத்தி தற்போது பிரிஸ்டோலில் உள்ள தூய நிக்கோலஸ் திருச்சபையின் போதகராக இருக்கிறார்.

ஜெம்மா ஹண்ட்

ஜெம்மா ஒரு BAFTA விருது பெற்ற TV தொகுப்பாளர், குழந்தைகள் பொழுதுபோக்கு வல்லுநர், டப்பிங் கலைஞர் மற்றும் வெகு நாள் ஆல்பா விரும்பி.

நிக்கி கம்பெல்

நிக்கி ஆல்பாவின் முன்னோடி, ஹோலி டிரினிட்டி ப்ரோம்ப்டனின் முன்னாள் போதகர், ‘க்வெஸ்டின்ஸ் ஆப் லைப் ‘ மற்றும் ‘சேர்ச்சிங் இஸ்யூஸ் ‘ புத்தகங்களுடன் பல்வேறு புத்தகங்களின் எழுத்தாளர் மேலும் ‘ பைபிள் இன் ஒன் இயர் (BIOY) என்னும் வேதாகம வாசித்தல் செயலியின் எழுத்தாளர்..

எபிசோட் வீடியோக்களின் முன்னோட்டத்தைப் பாருங்கள்

பங்களிப்பாளர்கள்

ஸ்காட் ஹாரிஸ்

USA வில் அமைந்துள்ள  சாரிடி:வாட்டர்  நிறுவனத்தை தோற்றுவித்தவர்

பேர் கிரில்லஸ்

யுனைடெட் கிங்டாமை சார்ந்த உலக புகழ் பெற்ற சாகசவீரர், எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர்

யோசே ஹென்றிக்கேஸ் கோன்சலேஸ்

சிலி நாட்டில் உள்ள சான் ஜோஸ் சுரங்கத்தில் அறுபத்தி ஒன்பது நாட்கள் சிக்கிய முப்பத்தி மூன்று சுரங்க தொழிலாளிகளில் ஒருவர்

ப்ரோபோகாண்டா

USA நாட்டில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சார்ந்த கிறிஸ்தவ ஹிப் ஹாப் மற்றும் வார்த்தை கலைஞர் மற்றும் கவிஞர்.

ஜாக்கி புள்ளிங்கர்

ஹாங் காங் நாட்டில் வசிக்கும், உலக புகழ் பெற்ற மிஷனரிகளில் ஒருவர்

யுகோ மோனியே

முன்னாள் இங்கிலாந்து சர்வதேச ரக்பி விளையாட்டு வீரர்.

ஆலிஸ்டர் மக்ராத்

யுனைடெட் கிங்டாமை சார்ந்த ஆக்ஸ்போர்ட பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் மதம் பேராசிரியர்.

கார்டினல் ஸ்சோன்போர்ன்

ஆஸ்திரியாவை சார்ந்து, கத்தோலிக்க சபையின் காதேகிசம் அறிவுறுத்தல்களை திருத்தி அமைத்ததற்கு உலகளாவிய கத்தோலிக்க சபைக்கு நன்கு அறிமுகமானவர்

ஜூலியா இம்மோனென்

யுனைடெட் கிங்டாமை சார்ந்த ஸ்கை ஸ்போர்ட்ஸ் செய்தி வர்ணனையாளர் மற்றும் இருமுறை கின்னஸ் சாதனை செய்த அட்லாண்டிக் பெருங்கடல் படகோட்டி

தந்தை ரேனியரோ கண்டலமெஸ்ஸா

இத்தாலியில் வசித்து போப்பாண்டவரின் செயற்குழுமத்திற்கு பிரசங்கியாராய் இருப்பவர்.

என்ன சேர்க்கப்பட்டுள்ளது?

ஆல்பா ஃபிலிம் சீரிஸ் நீங்கள் தொடங்குவதற்கு தேவையான அனைத்தையும் கொண்டுள்ளது, மேலும் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கும்.

அனைத்து அத்தியாயங்களும் பதிவிறக்கம் மூலம்
ஆல்பா திரைப்படத் தொடர் குழு வழிகாட்டி (விவாதக் கேள்விகளுடன்)
ஆல்பா திரைப்படத் தொடர் தலைவர் பயிற்சி
சூழல் சார்ந்த குறிப்புகள் மற்றும் கருவிகள்

Skip to content